Saturday, January 30, 2010

தமிழ் படம் விமர்சனம்

படம் : " தமிழ் படம் "

நடிகர்கள் :" சிவா, திஷா பண்டே, வெண்ணிறாடை மூர்த்தி, M S பாஸ்கர், மனோபாலன், பறவை முனியம்மா மற்றும் பலர் .

இயக்குனர் : " C S அமுதன்"

இசை : " கண்ணன் "
இது ஒரு வித்யாசியமான திரைப்படம் . பல தமிழ் படங்களை வைத்து கதை உருவாகி உள்ளது . கதை ஒரு குடிசையில் ஆரம்பம் ஆகுகிறது காமெடியாக. அதே வேகத்தில் செல்கிறது சென்னை நகரத்துக்கு. சிறுவன் சிவா ( கதாநாயகன் ) தன் எதிர் முன்னே ஒரு அநியாயம் நடக்கிறது அதை தன் பாட்டியிடம் முறையிடுகிறார் பக்கத்தில் இருக்கும் சைக்கிள் மிதித்து பெரியவனாகுகிறார். அநியாயத்தை தட்டி கேட்கிறார். சண்டை ஆரம்பம் ஆகுகிறது இந்த சண்டைக்கு கைதட்டல் விசில் பறக்கிறது. சண்டை முடிந்ததும் பாட்டு , இந்த பாட்டில் அவர் போடும் நாட்டியம் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. ஆனால் சிவா பேசும் வசனம் நம்மை கடிக்க செய்கிறது. பாட்டு முடிந்ததும் வில்லன் வருகிறார். வில்லன் உரையாடல் தளபதி படத்தின் மம்முட்டியின் நகலை காண்பித்து இருக்கிறார்கள், ஆனால் காமெடி இல்லை .

வெண்ணிறாடை மூர்த்தி, M S பாஸ்கர், மனோபாலன் மற்றும் சிவா நண்பர்கள், இவர்களை சிறுவர்கள் போல் சித்தரித்துள்ளார் இயக்குனர். படம் பாட்டு, சண்டை, சொர்ணக்கா வில்லி கொடூர கொலை இப்படியே செல்கிறது கதை .

படம் என்றாள் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருப்பார்கள். கதாநாயகி அறிமுகம் வித்தியாசமாக உள்ளது . பிறகு என்ன சிவா, திஷா பண்டேவிடம் (கதாநாயகி ) காதல் வசம் படுகிறார். பிறகு இருவரும் காதல் செய்கிறார்கள், சொல்லவே வேண்டாம் பாடல் தான் ! காதல் பாடலில் வரிகள் இல்லை ஆனால் பாடல் நம்மை ரசிக்கும் படியாக உள்ளது. சில சில இடங்களில் வில்லன்களை சிவா கொலை செய்கிறார். என்ன என்று தெரிய வில்லை. இப்படியே காமெடியாக விரு விருப்பாக செல்கிறது முதல் பாதி கதை .
இரண்டாம் பாதியில் கதாநாயகின் அப்பா பணக்காரன், அதனால் பணக்கார மாப்பிளைக்கு தான் தன் மகளை கல்யாணம் செய்து கொடுப்பேன் என்று சொல்ல, ஒரே பாட்டில் பணகாரனாகுகிறார் சிவா. சிவா திஷா பண்டே கல்யாணம் செய்ய முன்வருகிறார்கள். அப்பொழுது சிவாவிற்கு தெரிகிறது தான் அனாதை என்று. கிராமத்தை நோக்கி செல்கிறார் தன் குடும்பத்தை கண்டு பிடிக்க. இந்த காட்சியில் இயக்குனர் நம்மை சிரிக்க வைக்க முயல்கிறார் ஆனால் நமக்கு சிரிப்பு வரவில்லை கடியாக தான் உள்ளத்து. காட்சிகள் நகர, தன் குடும்பத்தை கண்டு பிடிக்கிறார். இந்த இடங்களில் படம் மெதுவாக செல்கிறது, வில்லனை தேடி செல்கிறார் இடையில் வில்லன் அடியாள்களை கொள்கிறார் காமெடியாக, இதற்கிடையில் போலீஸ் அதிகாரியாக சிவா மாறுகிறார் மூன்று எழுத்து நடிகரை மிக மோசமாக ஓட்டி இருக்கிறார்.

கடைசியில் வில்லனை விட்லாசாரியார் படம் போல் ஒரு, ஒரு தடைகளை கடந்து (நெருப்பு, காற்று ,....) கண்டு பிடிக்கிறார். பார்த்தால் தான் நேசித்த ஒருவர் இந்த காட்சி நம்மளை சிரிக்க வைக்க இயக்குனர் நினைத்து இருக்கறார் நமக்கு சலிப்பு தான் மிஞ்சுது. வில்லியை அழைத்துகொண்டு நீதி மன்றம் வருகிறார் அப்பொழுது தன் சக போலீஸ் அதிகாரியை நீதிபதி முன் சுட்டு கொள்கிறார் . வில்லி மற்றும் சிவா இருவரும் சிறையடிக்க படுகிறார்கள்.

சந்திரமுகி, காக்க காக்க , விரும்பாண்டி, நாயகன், கஜினி ..... படத்தின் நகலை காண்பித்து இருக்கிறார் இயக்குனர் மிக காமெடியாக .

படம் இறுதியில் சிவா மற்றும் வில்லி இருவரும் நிரபராதி என்று நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார். படம் இத்துடன் முடிகிறது.இயக்குனர் C S அமுதன் நல்ல விரு விருப்பாக முதல் பாதியை நகத்தி, இரண்டாம் பாதியில் கதை சொல்லறது போல் காட்டி படத்தின் விரு விருப்பை குறைத்து கதையும் இல்லாமல், காமெடியையும் இல்லாமல் நம்மளை சலிக்க வைத்து உள்ளார். இயக்குனர் முதல் பாதியில் செலுத்திய கவனத்தை இரண்டாம் பாதியில் செலுத்தி இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

கண்ணனின் இசையில் இரு பாடல்கள் நம்மை ரசிக்கும் படி உள்ளது கைதட்டல்யும் வாங்கி உள்ளார். மத்த பாடல்களில் அரங்கத்தில் ஆள் இல்லை. பின்னணி இசை சுமார் தான்.

கேமரா சுத்தி சுத்தி விஜய் படத்திற்கும் எப்படி விளையடுமோ அதே போல் விளையாடி இருக்கிறது. திரைக்கதையில் கவனம் கொஞ்சம் நன்றாக செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் "தமிழ் படம் ஒரு கலவை கலந்த தமிழ் படம் "!!!!!

2 comments:

டவுசர் பாண்டி... said...

எழுத்துப் பிழைகளை கவனிக்கவும்.

தொடர்ந்து எழுதிடுங்கள்...

வாழ்த்துகள்...

patricelamonica said...

Blackjack, Texas - MapYRO
Get directions, reviews 경상북도 출장마사지 and information 서울특별 출장마사지 for Blackjack, Texas in Austin, Georgetown, Fort Worth, Fairfield, San Marcos, Fort Worth, Austin, Tulalip 양산 출장마사지 Resort & 원주 출장샵 Casino. 전주 출장안마