படம் : "கோவா"
நடிகர்கள் : ஜெய், பிரேம்ஜி, வைபவ், அரவிந்த், பிரசன்னா, சிநேகா மற்றும் பலர்.
இயக்குனர் : வெங்கட் பிரபு
இசை: யுவன் சங்கர் ராஜா நீங்கள் நல்ல கதை விரும்பியா இல்லை குடும்ப தலைவனா ! என்றால் இந்த படத்தை தவிர்க்கலாம். இது ஒரு காமெடி கலந்த மசாலா திரைப்படம். கதை இளையராஜா பாடலுடன் ஆரம்பம். பாடல் கிராமத்தை தழுவயுள்ளது. பாடல் வரிகள் சூப்பர் நல்ல கிராமிய பாடல் கைதட்டல் விசில் பறக்கிறது அரங்கத்தில். முதலில் கிராமத்தை கட்டுகிறார் இயக்குனர். பஞ்சாயத்துடன் ஆரம்பம், மூன்று இளைங்கர்கள் ( ஜெய், பிரேம்ஜி, வைபவ் ) இவர்கள் மூவரும் நண்பர்கள். பிரேம்ஜி சாமியார் ! ஜெய் வெளிநாட்டு கலாச்சார விரும்பி !! வைபவ் பண்ணையார் மகன் !!! . பஞ்சாயத்தில் இவர்களுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்படுகிறது . அடுத்த காட்சி கிராமத்து பாடலுடன் முடிகிறது. இந்த பாடல் நாட்டுபுற பாடல். பாடல் சுமார் தான் .
மூன்று இளைங்கர்கள் ஊரை வெறுக்கிறார்கள் . மதுரை செல்ல அங்கு தன் நண்பன் ஒருவரை சந்திகிறார்கள் மாப்பிளையாக, மணப்பெண் வெள்ளைக்காரி. மூவரும் அதிர்ச்சியில் குடிக்கிறார்கள். பிறகு தன் நண்பனை சந்தித்து பேசுகிறார்கள். அவன் கோவாவில் வேலை பார்பவதாகவும் அங்கு வெள்ளைக்காரி பெண்ணை காதல் செய்து இப்பொழுது கல்யாணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆக போவதாக சொல்ல, மூவரும் கோவா செல்ல தீர்மானிக்கிறார்கள். கல்யாணத்தில் பிரேம்ஜி ஒரு வெள்ளைகாரியை காண்கிறார் அவளிடம் காதல் வசம் படுகிறார். இந்த காட்சி காமெடியாக செல்கிறது.
மூவரும் கோவா நோக்கி செல்கிறார்கள் லாரி உதவியுடன். கோவாவை அடைந்ததும் பாடல் ஆரம்பம் ஆகுகிறது. இந்த பாடல் சுமார் தான் படலை குடும்பத்தோட பார்க்க முடியாது அரை ஆடை பெண்கள், உள்ளாடை பெண்கள் தான் பாடலில் அதிகம். வெள்ளைக்காரி பெண்கள், குடி, கும்மாளம், பார், கடி காமடி என்று படம்மெதுவாக நகர்கிறது.
தற்செயலாக ஒரு தமிழ் இளைங்கனை சந்திகிறார்கள் (அரவிந்த் ). அரவிந்த் அடைக்கலம் தர முன்வருகிறார். மூவரும் தன் இலட்சியத்தை சொல்கிறார்கள். இதற்க்கு அரவிந்த் மற்றும் தன் ஓரின சேர்க்கை நண்பர் சேர்ந்து உதவுகிறார்கள். இந்த அணியில் ஒரு பாடகி சேர்கிறாள். மூவரையும் இப்பழுது உள்ள கலாச்சாரத்துக்கு கொண்டு வருகிறார்கள் இவர்களின் முடி திருத்த படுகிறது, ஆடைகள் அலங்காரம் செய்ய படுகிறது, ஆங்கிலமும் கற்று தரபடுகிறது. ஜெய் தன் பாடல் அழகியை காதல் செய்கிறார் இப்படியே முதல் பாதி போலீஸ் வருகையில் முடிகிறது.
இரண்டாம் பாதி சொல்லும்படி ஒன்றும் இல்லை. பிரேம்ஜி தன் காதலியை கோவாவில் சந்திகிறார் இருவரும் காதல் வசபடுகிறார்கள். அரவிந்த் தன் ஓரின சேர்கை நண்பரை சந்தேகம் படல். பாடல், குடி, கும்மாளம், பார், வைபவ் சிநேகா காதல் கல்யாணம் இப்படியே நகர்கிறது கதை. சிநேகா ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என்று தெருகிறது பிரசன்னா உதவியுடன் வைபவக்கு . சிநேகா கொடுமை. சிநேகாமிக தாரளமாக நடித்துள்ளார்.
கடைசியில் பிரேம்ஜி தன் வெள்ளைக்காரி காதலியை கல்யாணம் செய்கிறார், ஜெய் பாடல் பாடும் தோழியை கரம் பிடிக்கிறார். மூவரும் ஊர் திரும்புகிறார்கள் அங்கு நயன்தாரா வைபுவிர்க்கு காத்திருக்கிறார். சிநேகா சிலம்பரசன் மன்மதன் பாணியில் முடிகிறது படம் . இரண்டாம் பாதி மிக கடியில் முடிகிறது, அரங்கமே வருத்ததுடன் வெளியில் செல்கிறது .
இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 28 , சரோஜா, போன்ற நல்ல படங்களை குடுத்து இந்த படத்தில் நம் எதிர்பார்பிக்கு சற்று தடுமாற்றம். இவர் ஏதோ ஒரு படத்தை எடுத்துள்ளார். படத்தில் சொல்லும்படி எந்த விசியம் இல்லை. கோவா ஒரு இளைஞன் சென்றால் இப்படி இருக்கலாம் என்று சொல்கிறார் ஆனால் நிலைமை வேறு. தமிழ் கலாச்சாரம் எங்கே என்று தெரிய வில்லை. பிளாஷ் பேக் அடிக்கடி வருவதால் நமக்கு சலிப்பு தான் . இவர் பழைய பாடல் சேர்க்கையை விட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும்.
யுவன் சங்கர் ராஜா பாடல்கள் சில சுமார் மூன்று பாடல்கள் விசில், கைதட்டல் வங்கயுள்ளது. பின்னணி இசை சூப்பர். திரைக்கதை, வசனம், நடனம் இல்லை.
மொத்தத்தில் "கோவா இளைங்கர்கள் மட்டும் பார்க்கும் படம்"
Sunday, January 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment